This Article is From Jun 10, 2019

ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம் பெண்ணுடன் நடனமாடிய எம்எல்ஏ

மத்தியில் ஆட்சியில் உள்ள எண்டிஏ அரசாங்கத்தின் கிழக்கு கொள்கைகளின் கீழ் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த மணிப்பூருக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர்.

Advertisement
இந்தியா Edited by

வீடியோகாட்சியில் பெண்ணுடன் நடனமாடும் எம்.எல்.ஏ

Moreh :

மணிப்பூர் மாநிலத்தில் கல்வி சார்ந்த ஆய்விற்காக சென்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் பீகார் மாநில எம்.எல்.ஏ யதுவன்ஷ் குமார் யாதவ் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டு பாட்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் யாதவ் பாடலுக்கு அந்த பெண்ணின் தோள்மீது கை போட்டு கொண்டு அந்த பெண்ணை கட்டி அணைக்க முயன்றபடியும் ஆடியுள்ளார். 

அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் ஜூன் 1-ம் தேதி நடந்தது. 

Advertisement

மத்தியில் ஆட்சியில் உள்ள எண்டிஏ அரசாங்கத்தின் கிழக்கு கொள்கைகளின் கீழ் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த மணிப்பூருக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். இந்த வீடியோவில் பாஜகவின் சச்சின் பிரசாத் சிங் மற்றும் ஆர்ஜேடி ராஜ் குமார் ராய்  மற்றும் ராஜ் பகர் ஆகியோருடன் 4 பணியாளர்களும் உடன் இருந்தனர்.   இந்த வீடியோவை இம்பால் டைம்ஸ் வெளியிட்டது. 

Advertisement