அவரை அடிக்கும் போது சக காவல்துறை அதிகாரிகள் சிரிப்பதையும் காணலாம்.
Kanpur: உத்தர பிரதேசத மாநிலம் கான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள், ஒருவரை சுவற்றில் கட்டி பெல்ட்டால் அடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கிராமத்திலிருந்து ஓடிவந்த பெண்ணுக்கு உதவியதற்காக அந்நபரை காவல்துறையினர் அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரை சுவரோடு அழுத்தி இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் காவல்துறையினர் பிடித்துக்கொள்ள முதுகில் பெல்ட்டைக் கொண்டும் குச்சியாலும் அடிக்கின்றனர். அவரை அடிக்கும் போது சக காவல்துறை அதிகாரிகள் சிரிப்பதையும் காணலாம்.
இந்த வீடியோ உள்ளிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கான்பூர் காவல்துறை உயரதிகாரி பிரதுமன் சிங், “நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டோம். போலீஸார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Click for more
trending news