This Article is From Mar 04, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ’பிட்’ கொடுத்து உதவிய ஊர் மக்கள்!

அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் துண்டு சீட்டுகளை வழங்கி காப்பியடிக்க உதவி செய்துள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ’பிட்’ கொடுத்து உதவிய ஊர் மக்கள்!

மகாராஷ்டிராவின் பள்ளி சுவற்றில் ஏறி நிற்கும் இளைஞர்கள்.

ஹைலைட்ஸ்

  • 10ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி சுவற்றில் ஏறி நிற்கும் இளைஞர்கள்
  • மாணவர்களுக்கு தூண்டு சீட்டு கொடுத்து காப்பி அடிக்க உதவி
  • சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Yavatmal:

மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளியின் சுவரில் ஏறி நின்ற படி, துண்டு சீட்டுகள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று 10ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் துண்டு சீட்டுகளை வழங்கி காப்பியடிக்க உதவி செய்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளியின் தேர்வு மையக் கட்டுப்பாட்டாளர் ஏ.எஸ் சவுத்ரி கூறும்போது, பள்ளியில் முழுமையற்ற முறையில் சுற்றுச்சுவர் உள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். இதற்காகப் பள்ளிக்குப் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போலீசாரை பலமுறை நாங்கள் அணுகினோம் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, நேர்மையான முறையில் தேர்வு நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சவுத்ரி கூறியுள்ளார். 

.