இந்த சம்பவம் ஆந்திராவின் டோடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- சிறுமி ஒருவர் ஊர் பஞ்சாயத்தில் தாக்கப்பட்டுள்ளார்.
- மைனரான அந்த சிறுமி, உறவினர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
- இந்த ஜோடியை மீண்டும் அழைத்து வந்த கிராமத்தினர் கடுமையாக எச்சரித்தனர்.
Hyderabad: ஆந்திராவில் தனது உறவுக்கார ஆணுடன் திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஊர் பஞ்சாயத்தில் முதியவர் ஒருவர் சரமாரியக முதியவர் ஒருவர் தாக்கும வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.தொட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி, 20 வயதுடைய தனது உறவுக்கார ஆண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காது என்று எண்ணியவர்கள், சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து வந்து ஊர் பஞ்சாயத்தில் நிறுத்தி இருவரையும் எச்சரித்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமியிடம் சில கேள்விகளை கேட்கிறார். அதற்கு அந்த சிறுமி உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த முதியவர், கிராம மக்கள் முன்பு அந்த சிறுமியை சரமாரியக தாக்குகிறார். முதலில் கையால் அடித்த அவர், பின்னர் தடியாலும் சரமாரியாக அடிக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது, சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அனந்த்பூர் மாவட்ட தலைமை காவலர் கூறும்போது, அந்த கிராம மக்களும், அச்சிறுமியின் பெற்றோரும் சிறுமியை அடித்த முதியவர் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்று கூறினர். மேலும், தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண் புகார் அளிக்க முன்வருகிறாரா என்பது குறித்து விசாரணை செய்ய பெண் காவலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அந்த சிறுமியுடன் அந்த இளைஞர் எல்லை மீறியிருந்தால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், யாரும் புகார் அளிக்க முன்வராத பட்சத்தில், SC/ST பிரிவு தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.