Thiruvananthapuram: திருவனந்தபுரம்: கேரள வனத்துறை அமைச்சர் ராஜூவின் காரை மறித்து கன்னியாஸ்திரி ஒருவர் புகார் மனு அளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஷோலையூர் வனபகுதிக்கு அருகில் உள்ள கான்வென்ட்டிற்கு வருகை புரிந்தார் வனத்துறை அமைச்சர் ராஜூ. அவர் திரும்பி போகும் போது கான்வென்டில் பணியாற்றும் ரின்சி என்ற கன்னியாஸ்திரி, காரை மறித்து அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
யானைகள் அந்தப் பகுதியை சேதப்படுத்தியுள்ளதால், வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாஸ்திரி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கான்வென்ட் நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த அமைச்சரின் கார் மறிக்கப்பட்டதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.