This Article is From Nov 26, 2019

Video: கண்ணிமைக்கும் நேரத்தில் மானை சுருட்டி இழுத்த மலைப்பாம்பு

இந்த வீடியோ மகாராஷ்டிராவின் மத்திய சாந்தா பிரிவில் பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார்.

Video: கண்ணிமைக்கும் நேரத்தில் மானை சுருட்டி இழுத்த மலைப்பாம்பு

மலைப்பாம்பு மானைத் தாக்கி சுருட்டி தண்ணீருக்குள் இழுக்கிறது.

இன்று இணையத்தில் மலைப்பாம்பு மானைத்தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, நான்கு மான்கள் குட்டையில் தண்ணீர் குடிக்கின்றன. கண்ணிமைக்கும் நொடியில் குளத்திலிருந்து வெளியே வரும் மலைப்பாம்பு மானைத் தாக்கி சுருட்டி தண்ணீருக்குள் இழுக்கிறது. சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். 

இந்த வீடியோ மகாராஷ்டிராவின் மத்திய சாந்தா பிரிவில் பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார். 

இந்த வீடியோ 16,000 முறை பார்க்கப்பட்டது. 

மலைப்பாம்பு இரையை கொல்ல அதனை இறுக்கி சுருட்டி மூச்சு திணற வைத்துக் கொல்லும் தன்மை கொண்டது. 
 
Click for more trending news

.