புலிகள் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்ளும் காட்சி.
பெண் புலி ஒன்றுக்காக சகோதர புலிகள் இரண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள நூர் என்ற பெண் புலிக்காக சின்சு, ராக்கி என்ற இரு சகோதர புலிகள் சண்டையிட்டுள்ளன.
இந்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரது விருப்பங்களைபெற்று வருகிறது.
கஸ்வான் தனது ட்விட்டர் பதிவில், ‘புலிகளுக்குள் சண்டை நடந்தால் அது இவ்வாறுதான் இருக்கும். வன்முறை காட்சிகளை நீங்களே பாருங்கள். இங்கு சகோதர புலிகள் பெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டையிடுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் ஆண் மனிதர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். புலிகளுக்கும் அந்த குணம் உண்டு என்பதை இந்த வீடியோ எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
நல்லவேளையாக இந்த சண்டையில் ராக்கிக்கும் சின்சுவுக்கும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை.