हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 13, 2019

உ.பியில் காவல்துறை அதிகாரிகள் சிறுவனின் கண் முன்னே இளைஞரை அடித்த சம்பவம்

காவல்துறையினர் ஏன் அடிக்கத்தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ரிங்கு பாண்டே காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

கிழக்கு உத்தரபிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் நேபாளத்தின் எல்லைக்கு அருகே ஒரு இளைஞனை இரண்டு காவல்துறை அதிகாரிகள் அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள்  வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

வீடியோவில் காவல்துறை அதிகாரிகள் இரக்கமின்றி தன் மாமாவை அடிப்பதை சிறுவன் பயந்து கொண்டு பார்க்கிறார். அந்த காணொளி வைரலானதையடுத்து இரு காவல்துறை அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் ஏன் அடிக்கத்தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ரிங்கு பாண்டே காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில்  ஈடுபட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

சம்பவத்தை நேரில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் சப் இன்ஸ்பெக்ட வீரேந்திர மிஸ்ரா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் இருவரும் ரிங்கு பாண்டேவை தவறான வார்த்தைகளால் திட்டியும் அடிக்கவும் செய்கின்றனர். அவருடன் வந்த குழந்தையின் கையிலும் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

Advertisement

“இது என் தவறு என்றால் சிறையில் அடையுங்கள்”என்று அந்த நபர் இந்தியில் காவல்துறை அதிகாரிகளிடம் கூறுகிறார். 

வீடியோவின் முடிவில் அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளின் சாவியை கொடுக்க மறுக்கிறார். காவல்துறையினர் பிடுங்க முயற்சிக்கின்றனர். “சொல்லுங்கள், என் தவறு என்ன?” என்று கேட்கிறார். 

Advertisement
Advertisement