மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
Farrukhabad: மேற்கு உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணொருவர் மருத்துவமனையின் தாழ்வாரங்களில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
ஃபாரூகாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையான ராம் மனோகர் லோஹீயா மருத்துவமனையில் இது நிகழ்ந்துள்ளது.
அங்கிருந்த பார்வையாளரால் மொபைல் மூலம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் பத்திரிகைகளுக்கு பகிரப்பட்டது. மருத்துவமனை நடைபாதையில் ஒரு பெண் பிரசவித்த சுற்றிலும் இரத்தத்துடன் கிடப்பதை பார்க்கமுடிகிறது.
சில நிமிடங்களுக்கு பிறகு உறவினர் பெண்ணொருவர் குழந்தையை துணியில் சுற்றி தூக்கி செல்கிறார்.
பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னரே மருத்துவமனையில் உள்ள லேபர் வார்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஃபரூக்காபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் மோனிகா ராணி, “ இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊழியர்கள் யாரேனும் அலட்சியம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.