This Article is From Jun 04, 2018

'காவிரி விவகாரத்தில் நம்பிக்கை பிறந்துள்ளது'- குமாரசாமி உடனான சந்திப்புக்குப் பின்னர் கமல்!

கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைருமான கமல்ஹாசன்

Kamal Haasan met HD Kumaraswamy to discuss Cauvery water sharing issue today.

ஹைலைட்ஸ்

  • காவிரி தொடர்பான வழக்கு சென்ற மாதம் முடிவடைந்தது
  • சில நாட்களுக்கு முன்னர் காவிரி மேலாண்மை அமைக்கப்பட்டது
  • ரஜினியின் கருத்தோடு என்னால் ஒன்றுபட முடியாது, கமல்
Chennai: கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைருமான கமல்ஹாசன். 

இன்று நடந்த இந்த சந்திப்பு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக கமல்ஹாசன் கூறினார். மேலும், அவர் கூறுகையில், “இன்று நடந்த சந்திப்பும் கலந்துரையாடலும் நிறைய நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது’ எனக் கூறினார். ஒரு மணி நேர நடந்த இந்த சந்திப்பு, கமலின் சொந்த மாநிலமான தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே வெகு நாள்களாக நடந்து வரும் காவிரி பங்கீடு பிரச்னை தொடர்பானது ஆகும். 

கடந்த மாதம் குமாரசாமி கர்நாடகா முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து தமிழ்நாடுக்கான சரியான உரிமையை குமாரசாமி அளிக்க வேண்டும் என கமல் தொடர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தார். கமல் இன்று கூறுகையில், “நாம் தண்ணீர் பகிர்ந்து கொடுங்கள் என்று கேட்கின்றோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதே தான் கர்நாடகா முதல்வரின் நிலைப்பாடும் கூட என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில், “நடிகர் ரஜினிகாந்த் என் நண்பர் தான். ஆனால், போராட்டம் என்பது தொடர்பாக அவர் கூறிய கருத்தில் இருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். நான் காந்திய வழியைப் பின்பற்றுகிறவன். நேரில் சந்திக்கக்கூட வாய்ப்பு பெறாத நிலையிலும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட போராட்ட குணத்தை நான் பின்பற்றுகிறேன். குமாரசாமிக்கு முன்னர் முதல்வராக இருந்த சித்தராமையா, தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டு தண்ணீர் தர மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்றும் கர்நாடகாவுக்கே அந்தத் தண்ணீர் போதவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், குமாரசாமி வேறு மாதிரி எடுத்துக் கூறியிருந்தாலும் முந்தைய முதல்வரிலிருந்து குமாரசாமியின் கருத்தில் ஒன்றும் மாறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை'' என்றுள்ளார்.

முன்னர் ரஜினிகாந்துக்கு பதில் அளித்த குமாரசாமி, “தண்ணீர் இருந்தால் தந்திருப்போம். முடிந்தால்  ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கே வந்து பார்வையிடட்டும்” எனக் கூறியிருந்தார். சமீபத்தில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த வாரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து 4 தென் மாநிலங்களுக்கு தன்ணீர் பகிர்ந்து அளிக்க மத்திய நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 
.