Read in English
This Article is From Sep 13, 2019

'புவி ஈர்ப்பு கண்டுபிடித்த Einstein-க்கு கணிதம் உதவவில்லை'- கேலிக்குள்ளான Piyush Goyal!

'புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன்' என்று இந்த மத்திய அமைச்சர் குறிய வார்த்தைகளை கேலி செய்யும் விதமாக மீம்கள் பரவி வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

'புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த Einstein-க்கு கணிதம் உதவவில்லை' - பியூஷ் கோயல்

Highlights

  • புவியிர்ப்பை கண்டுபிடித்தவர் பற்றி பியூஷ் கோயல் கூறிய கருத்தில் பிழை
  • 'அது நியூடன், ஐன்ஸ்டீன் அல்ல' என்று டிவிட்டரில் கேலி
  • நேற்று நிர்மலா சீதாராமனின் கருத்தும் இதே போல கேலிக்கு உள்ளானது
New Delhi:

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பொருளாதாரம் குறித்த ஆதரவான பேச்சில், புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது யார் என்று அவர் குறிப்பிட்ட கவணக்குறைவான பிழை, தற்போது டிவிட்டரில் கேலிக்குள்ளாகியிருக்கிறது.' புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன்...' என்று இந்த மத்திய அமைச்சர் குறிய வார்த்தைகளை கேலி செய்யும் விதமாக மீம்கள் பரவி வருகிறது. சிலர், நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), சில நாட்கள் முன் மோட்டார் வாகனத்துறை வீழ்ச்சி பற்றி பேசுகையில், ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) பற்றி கூறிய கருத்துகளை மீண்டும் குறிப்பிட்டும் கேலி செய்து வருகின்றனர்.

டில்லியில் வர்த்தக சபையுடனான சந்திப்பின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தொலைகாட்சிகளில் காண்பிக்கப்படும் கணக்குகளை பொருட்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவிரித்தினார். "ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் உங்கள் பார்வை இருந்தால், நாடு 12 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர வேண்டும், இப்போது 6 சதவிகித வேகத்தில் வளர்கிறது" என்றார். மேலும் "கணக்குகளுக்குள் செல்லாதீர்கள். அந்த கணக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபித்த ஐன்ஸ்டீனுக்கு எப்போதும் உதவவில்லை....ஒருவேளை நீங்கள் கட்டமைக்கப்பட்ட சூத்திரங்கள் மற்றும் கடந்தகால அறிவு ஆகியவற்றால் ஆகியவற்றில் மட்டுமே சென்றிருந்தால், இந்த உலகில் ஏதேனும் புதுமை இருந்திருக்குமா என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்

உடனடியாக டிவிட்டரில் பலர் அது நியூடன், ஐன்ஸ்டன் இல்லை என்று சுட்டிக்காட்ட, Piyush Goyal பெயருடன் Einstein, Newton ஆகிய பெயர்களும் இந்திய ட்ரெண்டிங் லிஸ்டில் டாப் இடங்களை பிடித்துவிட்டது. இந்த லிஸ்டில் 'Gravity'-யும் தனக்கான இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின், மோட்டார் வாகனத்துறை வீழ்ச்சிக்கு ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவங்கள்தான் காரணம் என்று கூறிய கருத்தும், இதே போல சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது. டிவிட்டரில் #BoycottMillennials என்ற கேலியான ஹேஸ்டேக் டாப் ட்ரெண்டிங் லிஸ்டில் சில மணி நேரம் முதலிடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது.

Advertisement

பல்வேறு துறைகளில் வேலை நிறுத்தத்திற்கு காரணமான பொருளாதாரம் குறித்த விவாகாரத்தில் பாஜக தொடர்ந்து பலமுறை காங்கிரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று முன்னதாக, காங்கிரஸின் ராகுல் காந்தி பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "இந்தியாவுக்குத் தேவையானது பிரச்சாரம், கையாளப்பட்ட செய்தி சுழற்சிகள் மற்றும் மில்லினியல்களைப் பற்றிய முட்டாள்தனமான கோட்பாடுகள் அல்ல, ஆனால் பொருளாதாரத்தை சரி செய்வதற்கான ஒரு உறுதியான திட்டம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
Advertisement