This Article is From Jul 19, 2018

‘சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதியுண்டு!’- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சபரிமைலையில் இருக்கும் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில் வெகு காலமாக தடை இருந்து வரும் நிலையில், அது குறித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

‘சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதியுண்டு!’- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
New Delhi:

சபரிமலையில் இருக்கும் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில் வெகு காலமாக தடை இருந்து வரும் நிலையில், அது குறித்தான வழக்கில் இன்று முக்கியத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெகு காலமாக 10 முதல் 50 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு சபரிமலையில் உள்ள கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. நீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வாலிகர், சந்திராசுத், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘அனைத்து பெண்களும் கடவுளின் படைப்பு தான். பின்னர் அவர்களை மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும். சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் உட்பட அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்த வித தடையும் இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் சிபிஎம் கட்சி, தீர்ப்பை வரவேற்றுள்ளது. கேரளாவின் அமைச்சர் கே.சுரேந்திரன், ‘கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சபரிமலையில் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறி நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

.