This Article is From Nov 19, 2019

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் : மாநிலங்களவை மார்ஷலுக்கு புதிய சீருடை

இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அவர்களது சீருடை மாற்றப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளைப் போன்று உடை மற்றும் தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது. சீருடையின் நிறமும் ராணுவ வீரர்கள் அணியும் வண்ணங்களிலிருந்து சற்று வித்தியாசமாகவுள்ளது.

மாநிலங்களவை இந்த ஆண்டு தனது 250வது ஆண்டினை நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

New Delhi:

நாடாளுமன்றத்தில் மார்ஷல்களின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

நாடாளுமன்றத்தில் அவை தலைவருக்கு அருகே பாதுகாவலர்களாக இருவர் நிற்பார்கள். அவர்களிருவரும் தான் அவைத்தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். மேலும், அவைத் தலைவர் வரம்பு மீறி பேசும் போது உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் பணியினையும் செய்வார்கள். 

இதுவரை இவர்களுக்கு இந்திய கலாசாரத்தின்படி, அவர்களுக்கு தலைப்பாகையுடன் சீருடை வழங்கப்பட்டிருந்தது. 

.