ஹைலைட்ஸ்
- மெரினாவில் நினைவுச் சின்னம் அமைக்க அரசு முடிவு
- ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவுச் சின்னம் இருக்கும்
- நினைவுச் சின்னத்தை எதிர்த்து வழக்கு தொடர்ப்பட்டுள்ளது
Chennai:
முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அமைந்திருக்கும் மெரினா கடற்கரையில், நினைவு சதுக்கம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஃபீனிக்ஸ் பறவை போல வடிவம் கொண்டதாக அந்த நினைவுச் சின்னம் இருக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “மெரினாவில் எந்த ஒரு கட்டிடங்கள் கட்டக் கூடாது. உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா தமிழகத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஓரிடம்” என அவர் கூறினார். இதை தீர்ப்பாக இல்லாமல், தனது கருத்தாகவே தலைமை நீதிபதி கூறினார்.
டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த இந்திரா பானர்ஜி இந்த கருத்தை தெரிவித்தார். தமிழநாடு அரசு வழக்கறிஞர், நினைவுச் சதுக்கம் அமைப்பதற்கான திட்ட வடிவமைப்பை தாக்கல் செய்வதாகவும், அதில் மெரினாவின் அழகுக்கு எந்த வித பாதிப்பையையும், நினைவகம் ஏற்படுத்தாது என்றும் அவ்ர் கூறினார். இந்த வழக்கை, ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.