Read in English
This Article is From Feb 21, 2019

வடகொரியா மீதான தடைகளை அகற்ற ட்ரம்ப் போடும் கண்டிஷன்!

வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த ட்ரம்ப் " தடைகள் முழு வீச்சில் உள்ளது. எந்த தடைகளையும் அகற்றவில்லை" என்றார்

Advertisement
உலகம் Edited by

ட்ரம்ப் மற்றும் கிம் அடுத்த வாரம் ஹானோயில் சந்திக்கவுள்ளனர்.

"வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடன் அர்த்தமுள்ள சந்திப்பை நிகழ்த்தினால் பொருளாதார தடைகள் அகற்றப்படும்" என்று கிம் மற்றும் ட்ரம்ப் இடையேயான இரண்டாவது சந்திப்புக்கு முன் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த ட்ரம்ப் " தடைகள் முழு வீச்சில் உள்ளது. எந்த தடைகளையும் அகற்றவில்லை" என்றார்.

"நான் தடைகளை அகற்ற தயார். ஆனால் அதற்கு அவர்களிடமிருந்து அர்த்தமுள்ள சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

ட்ரம்ப் மற்றும் கிம் அடுத்த வாரம் ஹானோயில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது சிங்கப்பூரில் நடந்த முதல் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களின் தற்போதைய நிலை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கிம்முடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும், இதில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புவதாகவும்  ட்ரம்ப் கூறினார்.

வடகொரிய - அமெரிக்க உறவுகளில் வியட்நாம் சந்திப்பு இறுதி சந்திப்பு அல்ல, இன்னும் சில சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் மூலமாக தான் தீர்வு காண முடியும் என்றார். சிங்கப்பூர் சந்திப்பில் அணு ஆயுத தளவாடங்களை அழிப்பது தொடர்பாக கிம் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வந்தது. தற்போது அடுத்த சந்திப்புக்குள் குறைந்தபட்ச செயல்களை துவங்கியிருந்தாலே போதும் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. இருவரும் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் வியட்நாமில் சந்திக்கின்றனர்.

 

Advertisement

மேலும் படிக்க - https://www.ndtv.com/tamil/16-states-sue-trump-over-emergency-declaration-to-build-border-wall-1995837சுவர் எழுப்ப ட்ரம்ப் அமல்படுத்திய‌ அவசர நிலையை எதிர்க்கும் 16 மாகாணங்கள்!

Advertisement