இந்தியாவின் வான்ட்டட் லிஸ்ட்டில், ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் முக்கிய இடத்தில் உள்ளார்.
ஹைலைட்ஸ்
- US, the UK and France stepped up pressure on Beijing
- India wants UN to ban Pakistan-based terrorist Masood Azhar
- China has been blocking move to ban Masood Azhar
New Delhi: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சீனா தனது பிடியை தளர்த்தியுள்ளது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக இருப்பவர் மசூத் அசார். இவர் இந்தியாவில், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர். இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது. ஐ.நாவை பொறுத்தளவில் அதன் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முடியும்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்தியாவின் முயற்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 4 முறை இந்தியாவின் முயற்சியை சீனா முறியடித்திருக்கிறது. பாகிஸ்தானின் நட்பு நாடு என்பதால் சீனா இந்த விவகாரத்தில் கூடுதல் அக்கறை காட்டுகிறது.
இந்த நிலையில், மசூத் அசார் விவகாரத்தில் சீனா தனது பிடியை சற்று தளர்த்தியிருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறுஐகயில், 'மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எதையும் முறையாக தீர்வு காண வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருக்கிறது' என்றார்.