அவரின் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க கட்சியினர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
Panaji: புத்தாண்டான இன்று புற்றுநோயின் பிடியில் இருக்கும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மாநில தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார். அவரின் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க கட்சியினர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
காலை 10.30 மணியளவில் மனோகர் பாரிக்கர் தனக்கு உதவும் மருத்துவக் குழுவோடு தலைமைச் செயலகத்து வந்தடைந்து ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
63 வயதான மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிட்ச்சை எடுத்து வந்தார். கடந்த மாதம் பானாஜியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பாலத்தை பார்வையிட வந்தார். அதன்பின் இன்று தலைமைச் செயலகத்து வந்து பணியாற்றினார். மனோகர் பாரிக்கரின் அடையாளமான வெள்ளை நிற அறைக்கை சட்டையும் அணிந்து மூக்கில் சின்ன ட்யூப்புடன் இருந்தார்.
கோவா பா.ஜ.க உறுப்பினர்களுக்கு இது மிகவும் உத்வேக அளிக்கும் நிகழ்வாக உள்ளதென தனாவடே கூறியிருந்தார். மேலும் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை நன்றாக முன்னேறியுள்ளது. முதல்வரைப் பார்க்கும்போது எங்களுக்கு உத்வேகம் அதிகரிக்கிறது என்று ஐஏஎன்எஸ்க்கு தெரிவித்தார்.