Read in English
This Article is From Oct 16, 2018

2 புதிய ஆவணங்கள் வெளியீடு… மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல் ஒப்பந்தம்!

இந்த புதிய ஆவணங்களால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது

Advertisement
இந்தியா
Paris:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டு பிளாக் (blog) ஒன்று அது குறித்து இரண்டு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளன. இந்த புதிய ஆவணங்களால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக பல விதிமுறைகள் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது.

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறது.

இது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்னர் ‘மீடியாபார்ட்’ என்கின்ற பிரஞ்சு புலனாய்வு பத்திரிகை, டசால்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் (mediapart) வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது.

Advertisement

இப்படிப்பட்ட சூழலில் தற்போது பிரான்ஸ் நாட்டு பிளாக்கான ‘போர்டெய்ல் ஏவியேஷன்’, டசால்ட் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு மே 11-ல் வெளியிட்ட இரண்டு ஆவணங்களை பதிவிட்டுள்ளது. சி.எஃப்.டி.டி, சி.ஜி.டி என்கின்ற அந்த இரண்டு தொழிற்சங்கங்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய பார்ட்னராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளன.

Advertisement