This Article is From Jun 19, 2019

ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி டீவீட்டிய ஸ்பெஷல் வாழ்த்து!

ராகுல் காந்தி பிறந்தநாளுக்குப் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி டீவீட்டிய ஸ்பெஷல் வாழ்த்து!

ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி #IAmRahulGandhi மற்றும் #HappyBirthdayRahulGandhi என்கிற ஹாஷ்-டேக்ஸுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று 49வது பிறந்தநாள். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, “ஸ்ரீ ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நெடுநாள் வாழ வாழ்த்துகிறேன்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி #IAmRahulGandhi மற்றும் #HappyBirthdayRahulGandhi என்கிற ஹாஷ்-டேக்ஸுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், காங்கிரஸுக்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி, மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் ராகுல் காந்திக்கு வரும் வாழ்த்துகள், அவரின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ராகுலின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கு ராகுல் காந்தி எப்படியெல்லாம் முன்னுதாரணமாக இருந்துள்ளார்” என்று வாசகத்துடன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. 

லோக்சபா தேர்தலின்போது ராகுல் காந்தி, காங்கிரஸுக்காக நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை தாறுமாறாக விமர்சனம் செய்தார். தான் பேசிய கூட்டங்களில் எல்லாம் ‘சௌகிதார் சோர் ஹே' என்பதை மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால், அவரின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி தலைமையிலான பாஜக மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. 

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் அந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்து, 52 இடத்தில் வெற்றி பெற்றது காங்கிரஸ். 

ராகுல் காந்தி, இந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் அமைச்சர் ஸ்மிருதி இரானியால் ராகுல் வீழ்த்தப்பட்டார். ஆனால் வயநாடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி ஆனார். 

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ராஜம்மா என்கிற ஓய்வு பெற்ற செவிலியரை சந்தித்தார். ராஜம்மா, ராகுல் பிறந்தபோது, மருத்துவமனையில் செவிலியராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல், ராஜம்மாவை சந்தித்த அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டார். 
 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டி சந்திப்பில் தெரிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா முடிவை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. ஆனால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதில் ராகுல் ஸ்திரமாக இருப்பதாக தெரிகிறது. 

ராகுல் காந்தி பிறந்தநாளுக்குப் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

.