Read in English
This Article is From Oct 30, 2018

சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் - ராகுலின் கருத்தால் சர்ச்சை

சபரி மலை விவகாரம் குறித்து கேரள காங்கிரசின் முடிவுக்கு முரண்பாடாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

Advertisement
இந்தியா

சபரி மலை தொடர்பாக கூறியது தனது தனிப்பட்ட கருத்து என்று ராகுல் தெரிவித்திருக்கிறார்.

Indore:

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து பெண்களும் வயது வித்தியாசம் இன்றி செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது பாரம்பரியத்தை மீறியதாக கூறி கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதற்கு கேரள காங்கிரசும் ஒரு வகையில் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கேரள காங்கிரசின் நிலைப்பாட்டிற்கு முரணாக கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, சபரி மலை பிரச்னை என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அனைத்து ஆண்களும், பெண்களும் சமம். அனைத்து பெண்களும் சபரி மலை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். கேரள மக்களின் உணர்வுகளை அம்மாநில காங்கிரஸ் பிரதிபலிக்கிறது என்றார்.

Advertisement

ரபேல் விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

Advertisement