பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கு எதிராக இருப்பவர் மம்தா பானர்ஜி.
Kolkata: பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வியாழனன்று பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
2016ல் பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் அறிவித்ததிலிருந்து, அதனை கறுப்பு நாள் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜியின் டிவிட்டர் பக்கத்தில், பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்த நடவடிக்கை. இதை செய்தவர்களை மக்கள் உரியமுறையில் தண்டிப்பார்கள். பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பொருளதார மேதைகள், பொது மக்கள் என அனைவரும் தற்போது பணமதிப்பு நீக்கம் பேரழிவு என்று உணருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.