Read in English
This Article is From Jul 11, 2018

“தாஜ்மஹாலை புனரமையுங்கள், இல்லை எனில் நாங்கள் மூடுவோம்”- அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

தாஜ்மஹால் முன்னர் மஞ்சள் நிறமாகவும், இப்போது பழுப்பு மற்றும் பச்சை நிறமாக மாறியுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா ,
New Delhi:

தாஜ்மஹாலை முறையாக பராமரிக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசை கடுமையாக விளாசியது.

“தாஜ்மஹாலை நீங்கள் புனரமையுங்கள், இல்லை எனில் நாங்கள் மூட உத்தரவிட வேண்டி இருக்கும்” என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. ஈஃபில் கோபுரத்தை ‘டி.வி டவர்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அந்த டவரை 8 மில்லியன் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர். தாஜ்மஹால் அதைவிட மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் அதை நல்ல முறையில் பராமரித்து இருந்தால், இந்தியாவின் அந்நிய செலாவணி பிரச்சனை தீர்ந்திருக்கும். உங்கள் அக்கறையின்மையால் தேசத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு உங்களுக்கு புரிகிறதா” என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.


தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில், அமைந்துள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏன் பின்பற்றவில்லை என்று, தாஜ்மஹால் மண்டலத்தின் ( Taj Mahal Trapezium Zone) தலைவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம், தாஜ்மஹாலை பாதுகாத்து முறையாக பராமரிக்க தவறி விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதிகரித்து வரும் காற்று மாசால், தாஜ்மஹால் முன்னர் மஞ்சள் நிறமாகவும், இப்போது பழுப்பு மற்றும் பச்சை நிறமாக மாறியுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement