இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவை இந்தியாவின் சாணக்கியர் என்று பாராட்டியுள்ளார்.
New Delhi: மகாராஷ்டிரா மாநில அரசியல் அதிரடியாக பல நடந்துள்ளது. வேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் முறையே மகாராஷ்டிரா முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த நடவடிக்கையை பாராட்டி பீகார் துணை அமைச்சர் சுஷில் குமார், இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவை இந்தியாவின் சாணக்கியர் என்று பாராட்டியுள்ளார்.
“இந்திய அரசியலில் உண்மையான சாணக்யா தான் என்று அமித்ஷா மீண்டும் நிரூபித்துள்ளார்” என்று சுஷில் குமார் ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று காலை இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதே நேரத்தில் என்சிபியின் அஜித் பவார் மாநில துணை முதல்வராக பதவியேற்றார்.
காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா இடையே அரசு உருவாக்குவது குறித்த விவாதங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் படி உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என்று ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை வெற்றி பெற்றபோதிலும் பெரும்பான்மையை பெறவில்லை. சிவசேனா ஆட்சி அதிகாரத்தில் சரிசம பங்கினை கேட்டு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.
288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 105 இடங்களையும் சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றது.