காதலர் தினத்தில் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த புகைப்படம்(courtesy aishwaryaraibachchan_arb)
ஹைலைட்ஸ்
- ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட குடும்ப புகைப்படம்.
- அபிஷேக் மற்றும் ஆராதயாவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
- இஸா அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
New Delhi: காதலர் தினமான இன்று ஐஸ்வர்யா ராய் பச்சன் அழகான குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தொழிலதிபர் இஸா அம்பானியின் திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சியில் உதய்பூரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் புகைப்படம் வெளியிட்டுள்ளார். உதய்பூர் அரண்மனையில் இந்த நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் ஐஸ்வர்யா ராய் தங்க வேலைப்பாடுகள் நிறைந்த உடையுடனும் அபிஷேக் பச்சன் சூட் கோட் மற்றும் மகள் ஆராதயா சிவப்பு நிற உடையிலும் இருந்தனர்.
இந்த புகைப்படத்தை போட்ட 3 மணிநேரத்தில் 3 லட்சம் லைக்குகள் குவிந்தன.
இஸா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை தீபிகா படுகோன் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராதயாவுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் இணைந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்த கடைசி படமான குலோப் ஜாமூன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.