இந்தாண்டின் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக காதலர்கள் தயராகிவருகின்ற நிலையில் பிரிடனில் உள்ள உயிரியல் பூங்கா ஓன்று வித்தியாசமாக ஓரு ஐடியாவுடன் இந்தாண்டின் கொண்டாட்டத்திற்காக களமிறங்கியுள்ளது.
அதன்படி தனது முன்னாள் காதலி/காதலர்களின் பெயர்களை அருங்காட்சியகத்தில் இருக்கும் கரபான்பூச்சிகளுக்கு வைக்கும் படி ஒரு திட்டத்தை தற்போது அந்த உயிரியல் பூங்கா உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள செவன்ஓக்ஸ் என்னும் இடத்தில் உள்ள ஹெம்ஸ்லேய் கன்சர்வேஷன் சென்டரில் உள்ள கரப்பான்களுக்கு, ரூ.140 செலுத்தி ஒருவரின் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பெயரை சூட்ட முடியும்.
‘ தங்களை காயப்படுத்தியவர்களை பழிவாங்கும் எண்ணமில்லாமல் இருக்க நினைக்கும் பலர், இப்படி பயனில்லாத கரபான்பூச்சிகளுக்கு தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயரை இதற்கு வைப்பதின் மூலம் நிம்மதி அடைவார்கள். மேலும் அந்த பெயர் வைத்தற்காக, கரப்பானின் பெயர்கொண்ட வாழ்துமடல் எதுவும் தரப்படாது, நாங்கள் மற்றோரு சண்டையை துவங்கி வைக்க விரும்பவில்லை' என ஹெம்ஸ்லேய் கன்சர்வேஷன் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எதிர்பார்ததுபோல் பல லைக்குகளும், கமென்ட்களும் இந்த பதிவுக்கு கிடைத்துள்ளது.மேலும் இந்த பதிவுக்கு குவிந்த கமென்டுகளில் ஒரு நபர் ‘அங்கு நிரைய கரப்பான் பூச்சிக்கள் இருக்கும் என நம்புகிறேன், என்னிடம் சில பல பெயர்கள் உள்ளது' என வேடிக்கையாக குறியிருந்தார். மேலும் ஓரு நபர் ‘சிட்னியில் இருந்து இதை படித்தேன். அடுத்தப்படியாக எலிகள், மரநாய்கள் அல்லது தவளைகளை தரலாமா' என எழுதியுள்ளார்.
Click for more
trending news