This Article is From Jul 04, 2019

அரசு பொறியாளர் மீது சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ மற்றும் அவரது ஆட்கள் பொறியாளர் மீது இரண்டு வாளி நிறைய சேற்றை ஊற்றியதுடன், அடித்து உதைத்து பாலத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசு பொறியாளர் மீது சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

நிதிஷ் ராணே முன்னாள் முதலமைச்சர் நாராயன ராணேவின் மகன்

Sindhudurg:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்த அரசு பொறியாளர் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் நாராயன் ராணே சேற்றை ஊற்றி பாலத்தில் கட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

மும்பை அருகே கன்காவ்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் நாராயன் ராணே. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான இவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணேவின் மகன் ஆவார். இந்நிலையில் கன்காவ்லி அருகே மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்று பாலத்தை அரசு பொறியாளர பிரகாஷ் ஷேதேகர் ஆய்வு நடத்த வந்தார்.

இந்த தகவலை அறிந்த எம்.எல்.ஏ நிதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்று அரசு பொறியாளரை தனது தொகுதியில் சாலைகள் சரியில்லை என முற்றுகையிட்டார். அப்போது எம்.எல்.ஏ மற்றும் பொறியாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆட்கள் பொறியாளர் மீது இரண்டு வாளி நிறைய சேற்றை ஊற்றியதுடன், அடித்து உதைத்து பாலத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.