This Article is From Apr 12, 2019

பரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞருக்கு ’பளார்’ விட்ட குஷ்பு!

தவறான நடவடிக்கைக்கு எதிரான குஷ்புவின் செயலுக்கு பலரும் பாரட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞருக்கு ’பளார்’ விட்ட குஷ்பு!

பலருக்கு தைரியம் அளிக்கும் விதமாக குஷ்பு நடந்துகொண்டதாக பாராட்டுகள் குவிகின்றன.

New Delhi:

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான குஷ்பு, கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்தபோது, தவறாக நடக்க முயன்ற இளைஞரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை குஷ்பு தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷாத்தை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கூட்ட நெரிசலில் சிக்கியபடி குஷ்பு மெதுவாக நடந்து செல்கிறார். அப்போது திடீரென தனது பின்னால் வந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என அறைகிறார். உடனடியாக பின்னால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் செல்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து குஷ்பு சுந்தர் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில், தவறான நடத்தைக்கு இடம் அளிக்காமல் பதிலடி கொடுத்ததற்கு, பலரும் குஷ்புவுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது ஆதரவாளர், யாரும் யாரையும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உரிமை இல்லை, அவ்வாறு அவர் செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், மற்றொருவர் தனது கருத்தில், 'எப்போதும் தைரியமாக இருக்கும் பெண்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த. விமர்சன உலத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும் பெரும் உத்வேகம் அளித்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு சுந்தர், பல்வேறு சாதி மற்றும் மதங்களுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கொண்டுவர முடிந்த ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்று கூறியிருந்தார்.

(With inputs from IANS)

.