This Article is From Aug 11, 2018

கேரள கனமழை எதிரொலி: வெள்ளத்தால் நிலைகுலைந்த எழுவர்!

ராணுவப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை என பல பிரிவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கேரள கனமழை எதிரொலி: வெள்ளத்தால் நிலைகுலைந்த எழுவர்!
Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் வெள்ள நீரால் ஒரு குழு நிலைகுலைந்தது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதறவைக்கும் வீடியோவில், ஒரு சிறிய மக்கள் குழு வெள்ள நீரில் மிதந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. திடீரென்று அதில் 3 அல்லது 4 பேரை வெள்ள நீர் நிலைகுலைய வைக்கிறது. 

ஆனால், உடனிருந்தவர்கள் தகுந்த நேரத்தில் உதவி செய்யவே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வயநாடு கண்ணியம்பட்டா கிராமத்தில்தான் இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. இதுவரை கேரள கனமழை காரணமாக 26 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை என பல பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி அணைக்கு மூன்றாவது ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகள் கழித்து அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

.