இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துணை ஆய்வாளர்கள் சஞ்சய் மாலிக் மற்றும் தேவேந்திரா மற்றும் கான்ஸ்டபிள் புஷ்பேந்திரா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹைலைட்ஸ்
- Police claim that two of their men were injured in the attack
- Driver, however, alleged that he was attacked by the cops first
- Arvind Kejriwal condemned the police action on the driver
New Delhi: வடமேற்கு டெல்லியில் இருக்கும் முகர்ஜி நகரில், போலீஸார் சிலர், கார் டிரைவர் ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னைத் தாக்கிய போலீஸாருக்கு எதிராக சண்டையிட கார் டிரைவர், கத்தி எடுத்ததால், இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போலீஸ் வேன் ஒன்றும் காரும் மோதிக் கொண்டதை அடுத்து இந்த பகீர் சம்பவம் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. டெல்லியில் பட்டப் பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில் போலீஸார் ஒருவர் மீது, கார் டிரைவர், மோதி விடுகிறார். இதையடுத்து போலீஸார் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வாக்குவாதம் முற்றவே, கார் டிரைவர் திடீரென்று கத்தி எடுத்து போலீஸாரை மிரட்டுகிறார்.
இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் டிரைவரோ, ‘என்னைத்தான் அவர்கள் முதலில் தாக்கினர்' என்று குற்றம் சாட்டுகிறார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துணை ஆய்வாளர்கள் சஞ்சய் மாலிக் மற்றும் தேவேந்திரா மற்றும் கான்ஸ்டபிள் புஷ்பேந்திரா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“முகர்ஜி நகர் சம்பவத்தில் போலீஸாரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். குடிமக்களின் பாதுகாவலர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும்படி இருக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரிவிந்த் கெஜ்ரிவால்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிலர் முகர்ஜி நகர் காவல் நிலையத்துக்கு எதிரில் போலீஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.