This Article is From Jun 11, 2019

மேற்குவங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு!

முக்தர் (68) அவருடைய குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

மேற்குவங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு!

தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

Kolkata:

மேற்குவங்கம் மாநிலம் பார்கானாஸ் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட மோதலுக்கு பதிலடியாக, நேற்றிரவு குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

முக்தர் (68) அவருடைய குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் நேற்றிரவு வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே முக்தர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி மற்றும் சிலர் படுகாயமடைந்துள்ளளனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பாராக்பூர் மக்களவைத் தொகுதியை சேர்ந்த கான்கினாரா பகுதியில் மக்களவை தேர்தல் முதல் மோதல்கள் நடந்து வருகிறது. முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் சிங், பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருந்த தினேஷ் திரிவேதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. கடந்த மாதத்தில் நடந்த கலவரத்தில், பாஜக ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். 

கடந்த 30ஆம் தேதி மம்தா பானர்ஜி கான்கிபாரா வழியாக செல்லும் போது, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே இறங்கிய மம்தா, கோஷம் எழுப்பியவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர்களை வெளியே இருந்து வந்தவர்கள் குற்றவாளிகள் என கடுமையாக குற்றம்சாட்டினார். 

.