New Delhi: ஓர் பாலின ஈர்ப்பு, இனி இந்தியாவில் குற்றமில்லை எனவும் அது மனநோய் அல்ல எனவும் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் 377 சட்ட விதிக்கு ஆதரவாக அளித்த தீர்ப்ப்புக்கு எதிராக இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 377 விதிக்கும் தடை பகுத்தறிவற்றது. “என்னை நானாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு குறித்து தெரிந்து கொள்ள 10 தகவல்கள்
1. மனிதர்களிடையே பாரபட்சம் காட்டும் 377 சட்டத்துக்கு முடிவு கொண்டு வரவேண்டிய நேரம் இது. பாலின ஈர்ப்பை வைத்து பாரபட்சம் பார்ப்பது, ஒருவரின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்” என நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். 5 நீதிபதிகளும் ஒரு மனதாக இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
2. 1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட 377 சட்ட விதி, இயற்கைக்கு முரணான பாலியல் ஈர்ப்பை குற்றமாக அறிவிக்கிறது.
3. இன்றைய தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், 377 சட்டத்தின் ஒரு பகுதி இன்னும் அமலில் இருக்கிறது. அதாவது ஒப்புதல் இல்லாமலோ, வலுக்கட்டாயமாக ஒப்புதல் பெற்றோ, குழந்தைகள், விலங்களுடன் பாலின சேர்க்கையில் ஈடுபட முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமே.
4. இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். பல ஆண்டு கால போராட்டத்தின் முடிவில், அவர்களுக்கு வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
5. பல ஆண்டுகள் நடந்த போராட்டத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் “ 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பட்ட சட்டம் மக்களிடம் இருந்து காதலை பறித்தது. தனிமனிதனுக்கு வழங்கப்படும் மரியாதை தான், தனி மனித உரிமையின் தன்மை.
6. பாலியல் சிறுபான்மையினருக்கும் அரசியல் அமைப்பின் படி சரிசமமான உரிமை உண்டு” என்றது.
7. ஓர் பாலின சேர்க்கைக்கு எதிராக 5 பேர் இந்த வழக்கை தொடர்ந்தனர். கிளாசிக்கல் டான்ஸர், பிரபல செஃப், ஹோட்டல் செயின் நிறுவனர் ஆகிய அந்த 5 பேர் தாங்கள் அச்சத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
8. இந்த மனுவுக்கு, கிறிஸ்துவ அமைப்புகள், சேவை அமைப்புகளும், சில தனி நபர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
9. 2009-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் 377 சட்ட விதி தனி மனித உரிமையை பறிக்கிறது என்று தீர்ப்பளித்திருந்தது.
10. 2013-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
இந்த விவகாரத்தை அரசு விவாதித்து, முடிவெடுக்கும் வரை காத்திருக்க முடியாது எனக் கூறி இந்த தீர்ப்பை அளித்துள்ளது.