பல கால்களுடன் இருக்கும் அந்த உயிரினம் வீடியோவில் நகர்வது தெரிகிறது.
அலாஸ்கா கடற்கரைக்கு அருகில் பிடிபட்ட ஒரு அபூர்வ கடல் உயிரினம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆங்கலர் வாசர்- அலஃபோர்டு என்பவர்தான் இந்த வினோத உயிரனத்தை 3 வாரங்களுக்கு முன்னர் பிடித்துள்ளார். அந்த உயிரினத்தை வீடியோ படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆங்கலர். அவர் பகிர்ந்ததில் இருந்து தற்போது வரை அந்த வீடியோவை சுமார் 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மிரர் செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, அலாஸ்காவில் இருக்கும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவிலிருந்து இந்த உயிரினத்தை ஆங்கலர் பிடித்துள்ளார்.
பல கால்களுடன் இருக்கும் அந்த உயிரினம் வீடியோவில் நகர்வது தெரிகிறது. அது பலரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. நீங்களும் அதைப் பாருங்களேன்.
வீடியோவை 18,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.
“இது உலகில் வாழும் வேற்று கிரகவாசி” என்று ஒருவர் பதிவிட, இன்னொருவர், “என்ன வகையான உயிரினம் இது” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த உயிரினத்தின் பெயர் ‘பாஸ்கெட் ஸ்டார்' என்பதாகும். அதை மீண்டும் கடலுக்குள்ளேயே ஆங்கலர் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் மீன்களைப் போன்றதுதான் இந்த பாஸ்கெட் ஸ்டாரும் என்கிறது நியூ யார்க் போஸ்ட் இதழ். பல கால்கள் கொண்ட அதன் உடலமைப்பால் கடலில் ஊர்ந்து, இரையைப் பிடிக்க முடியுமாம்.
Click for more
trending news