This Article is From Dec 31, 2019

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

3-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை தொடரலாம் என தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை 4-ஆம் தேதிக்கு பள்ளிக் கல்வித்துறை மாற்றியிருக்கிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by

இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 10,11,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 11-ம்தேதி தொடங்கி 23-ம்தேதி வரையில் நடைபெற்றன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே மீண்டும் பள்ளி எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் காணப்பட்டது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் ஜனவரி 2-ம்தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.  

இதனிடையே, தமிகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் ஜனவரி 2-ம்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. 

Advertisement

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவானது, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில் 3-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை தொடரலாம் என தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை 4-ஆம் தேதிக்கு பள்ளிக் கல்வித்துறை மாற்றியிருக்கிறது.

இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement