This Article is From Jun 06, 2019

நீட் தேர்வில் தோல்வி! தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

நேற்று 2 மாணவிகள் தற்கொலை செய்திருந்த நிலையில் இன்று விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் தோல்வி! தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த விழுப்புரம் மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடக்கம் முதலே தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் எவ்வித சமரசமும் இன்றி மத்திய அரசு தேர்வை நடத்துகிறது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்ததால், தமிழகத்தில் நேற்று 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்த அவர் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 490 மதிப்பெண்களை எடுத்துள்ளார். 

இதேபோன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் முடிவுகளுக்கு தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்தனர். இந்த அதிர்ச்சி குறைவதற்கு முன்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கோனிமேடு குப்பத்தை சேர்ந்த மோனிஷா என்பவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கடந்த முறையும் மோனிஷா தேர்வை எழுதினார். அதில் அவர் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த முறை தேர்வு எழுதினார். இதிலும் நல்ல மதிப்பெண்கள் பெறாததால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். 


 

.