Read in English
This Article is From May 27, 2020

10 ஆண்டுகளுக்குப் பின் கேமராவில் சிக்கிய அரிய வகை சிறுத்தை!

2012 ஆம் ஆண்டு சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு யூனியன், உலகில் வெறும் 37 சஹாரன் சிறுத்தைகள் மட்டுமே உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

Advertisement
விசித்திரம் Edited by

ஹோகர் மலைத் தொடரில் கடந்த 2008- 2010 ஆம் ஆண்டுகளில் 4 சஹாரன் சிறுத்தைகள் ஒன்றாக சுற்றியபோது கடைசியாக அவை தென்பட்டன.

ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவில் சஹாரன் சிறுத்தை (Saharan cheetah) 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் உயிரினங்களில் சஹாரன் சிறுத்தையும் ஒன்று என்று சர்வதேச இயற்கை பாதுகாப்பு யூனியன் அறிவித்துள்ளது. ஆப்ரிக்காவில் வேறு சிறுத்தை வகைகள் இருந்தாலும், சஹாரன் சிறுத்தைப் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். சாதாரண சிறுத்தைகளைவிட சற்று உயரம் குறைவாக, மங்கிய நிறத்தில் இருக்கும் சஹாரன் சிறுத்தை.

அல்ஜீரியாவின் ஹோகர் மலைத் தொடரின் தேசியப் பூங்காவில் சமீபத்தில் ஒரு சஹாரன் சிறுத்தை தென்பட்டுள்ளது. 

இது குறித்து பூங்கா அதிகாரியான சாலா ஆமோக்ரான், “பூங்காவில் பணி செய்து வரும் விஞ்ஞானிகளின் வேலைகள் குறித்து ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அதில்தான் இந்த சஹாரன் சிறுத்தையின் படங்கள் உள்ளன. அடகோர் வல்கானிக் பகுதியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார். 

Advertisement

வெளியிடப்பட்ட சஹாரன் சிறுத்தையின் படத்தைப் பார்க்க:

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இந்த சிறுத்தையின் படம் வெளிவந்ததைத் தொடர்ந்து இயற்கை மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் இது குறித்து நெகிழ்ச்சியான பதிவுகளை இட்டு வருகின்றனர். இந்திய வனத் துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, “உலகில் வாழும் பூனை இனங்களில் மிகவும் ரகசியமானது சஹாரன் சிறுத்தை. உலகில் வெறும் 37 சஹாரன் சிறுத்தைகளே உள்ளன,” என்று தகவலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், கஜகஸ்தானில் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட பனிச் சிறுத்தைகளின் படங்களையும் பகிர்ந்திருந்தார். பனிச் சிறுத்தைகள் தென்படுவதும் மிகவும் அரிதானது என்று அவர் கூறுகிறார். 

ஹோகர் மலைத் தொடரில் கடந்த 2008- 2010 ஆம் ஆண்டுகளில் 4 சஹாரன் சிறுத்தைகள் ஒன்றாக சுற்றியபோது கடைசியாக அவை தென்பட்டன.

2012 ஆம் ஆண்டு சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு யூனியன், உலகில் வெறும் 37 சஹாரன் சிறுத்தைகள் மட்டுமே உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement