viral video - அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது
ஒரு பாம்பு (Snake), இன்னொரு பெரிய பாம்பை சாப்பிடும் சம்பவத்தை கேள்விப்பட்டிருப்பதே கடினம். தற்போது அது குறித்து ஒரு வீடியோ வெளியாகி இணைய வைரலாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியரான இவாஞ்சலின் கம்மிங்ஸ், கெயின்ஸ்வில் என்ற பகுதியில் பாம்பு, இன்னொரு பாம்பைச் சாப்பிடும் சம்பவத்தைப் பார்த்துள்ளளார். உடனே அதை அவர் வீடியோவாக எடுத்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், ஈஸ்டர்ன் கோரல் பாம்பு, கிளையிலிருந்து தொங்கும் ரேட் பாம்பை விழுங்குகிறது. அந்த சமயத்தில் அங்கு வரும் குளவி ஒன்று, கோரல் பாம்பைக் சரமாரியாக தாக்குகிறது. உடல் ரோமங்களை எழும்பச் செய்யும் இந்த வீடியோவுக்கு வியூஸ் கூடிக் கொண்டே போகிறது.
அந்த சம்பவத்தின் வீடியோவைக் கீழே பார்க்கலாம். வலுவற்ற இதயம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
பலர், இந்த வீடியோவை எடுத்ததற்கே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர், இப்படிபட்ட அறிய நிகழ்வை படம் பிடித்ததற்கு கம்மிங்ஸுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவுக்கு மக்களின் ரியாக்ஷன்:
நேஷனல் ஜியோகிராஃபிக் கொடுக்கும் தகவல்படி, கோரல் வகைப் பாம்புகள், மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை எனப்படுகிறது. அந்த பாம்பின் நஞ்சு உடலில் பாய்ந்துவிட்டால், அது, இதய செயலிழப்புக்கு வித்திடலாம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அவை, மனிதர்களிடமிருந்து தள்ளியே இருக்க விருப்பப்படுமாம். அதைச் சீண்டினால் மட்டுமே கொத்த முற்படும் என்று சொல்லப்படுகிறது. பல்லிகள், தவளைகள் மற்றும் சிறிய வகை பாம்புகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழுமாம் கோரல் பாம்புகள்.
Click for more
trending news