This Article is From Jul 08, 2020

அரசுப் பள்ளிகளில் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கம்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளிலும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

அரசுப் பள்ளிகளில் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கம்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது, இதன் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பொதுமுடக்கம் அடுத்தடுத்த மாதங்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விமுறையில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. இதனிடையே, ஆன்லைன் கல்விமுறை தேவையா, இல்லையா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. 

இந்நிலையில், அரசுப் பள்ளிகளிலும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, 

Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ஆம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement