This Article is From Jul 22, 2018

ஜி.எஸ்.டி மாற்றம் 35 பொருட்களுக்கு மட்டுமே 28% வரி

ஜி.எஸ்.டி கவுன்சில் 28% வட்டி விதிக்கப்பட்டிருந்த 191 பொருட்களை நீக்கி, வெறும் 35 பொருட்களை மட்டுமே வைத்துள்ளது

ஜி.எஸ்.டி மாற்றம் 35 பொருட்களுக்கு மட்டுமே 28% வரி
New Delhi:

ஜி.எஸ்.டி கவுன்சில் 28% வட்டி விதிக்கப்பட்டிருந்த 191 பொருட்களை நீக்கி, வெறும் 35 பொருட்களை மட்டுமே வைத்துள்ளது. அதிகபட்ச வரி விதிப்பான 28% பிரிவில், ஏ.சி,  டிஜிட்டல் கேமரா, வீடியோ ரெக்கார்டர்,  ஆட்டோமொபைல் போன்றவை மட்டுமே இப்போது இடம் பெற்றிருக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யும்போது 226 பொருட்களுக்கு 28% வரி விதிப்பு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில் இது 191 பொருட்களாக குறைக்கப்பட்டது. 

நேற்று கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஜூலை 27-ம் தேதி அமலுக்கு வருகிறது. இதில் சிமெண்ட், ஆட்டோமொபைல், டையர்கள், ஆட்டோ மொபைல் உதிறி பாகங்கள், விமானங்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை, மற்றும் பான் மசாலா ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது. 

.