இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்று அதன் உரிமையாளர் மீது இரண்டு கால்களை தூக்கி வைத்துக் கொண்டு செல்கிறது.
பிபிசி தொகுப்பாளர் டாம் ப்ரூக் இந்தியாவில் மும்பை தெருக்களில் ஆட்டோ சென்றபடி நிகழ்ச்சியினை செய்தார். நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைக்கவேண்டிய பிரபலம் தப்பி நாய்க்கு கிடைத்து விட்டது.
ஆட்டோவில் சென்றபடி நிகழ்ச்சி தொகுப்பினை தொடங்கிறார் டாம் ப்ரூக். தன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும் போது அவரின் பின்பக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்று அதன் உரிமையாளர் மீது இரண்டு கால்களை தூக்கி வைத்துக் கொண்டு செல்கிறது.
வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்த ட்விட்டர்வாசி “16 விநாடிகள் மட்டுமே உள்ள அழகான ஆச்சரியத்தை தரக்கூடிய வீடியோவை பாருங்கள்”
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 98,000 முறை பார்க்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேடிக்கையான கமெண்டுகளை பெற்றுள்ளது.
ஒரு நபர் இந்த வீடியோவை விரும்புவதாகவும் மற்றொரு நபர் இந்த நாளின் புன்னகைக்கானது என்று வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Click for more
trending news