This Article is From Jul 29, 2019

தேசிய வரைவு கல்விக்கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!!

ஜூலை 31-ம்தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய வரைவு கல்விக்கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!!

ஆகஸ்ட் 15-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேசிய கல்விக் கொள்கைக்கான புதிய வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. எதிர்ப்பாளர்கள் தரப்பில் தேசிய வரைவு கல்விக்கொள்கை இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. 

தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ம்தேதியுடன் முடிவடைய இருந்தது. 

இதனை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் காலக்கெடு ஆகஸ்ட் 15-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

.