கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி, தி.மு.க தலைவராக பதவி ஏற்ற மு.க ஸ்டாலின் மாநில அரசை தாக்கிப் பேசினார். “சுயமரியாதையை இழந்து, தமிழக மக்களின் நலைனை கூரு போட்டு கொள்ளையடித்து வருகிறது மாநில அரசு. அதைத் தூக்கி எறிய வா" என்று தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உரையாற்றினார் ஸ்டாலின்.
அதனை அடுத்து, சேலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று தெரிவித்தார். காழ்ப்புணர்ச்சி காரணமாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றார்
தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருவதால், மத்திய அரசிடம் இருந்து விருதுகளை பெற்றுள்ளது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் தமிழக அரசு மீது திட்டமிட்டு பொய் பிராச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்
மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது. 152 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கிக்கொள்ளலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)