This Article is From Nov 06, 2018

‘2019 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ராகுல் தலைமை வகிக்க வேண்டும்!’- முதல்வர் குமாரசாமி

சட்டமன்ற தேர்தலின் போது, நாங்கள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளித்தது. இப்போது காங்கிரஸுக்கு நாங்கள் அதரவளிக்க வேண்டும்

‘2019 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ராகுல் தலைமை வகிக்க வேண்டும்!’- முதல்வர் குமாரசாமி

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் முடிவுகள்

New Delhi:

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ராகுல் காந்தி தலைமை வகிக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

கூட்டணி அமைத்து இடைத் தேர்தலின் 4 இடங்களில் வெற்றி பெற்றது குறித்து பேசிய குமாரசாமி, ‘பாஜக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் போதெல்லாம், அந்தக் கட்சி படுதோல்வியைத் தான் சந்தித்துள்ளது. இது முன்னர் உத்தர பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. தற்போது கர்நாடகவிலும் நடந்துள்ளது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் புள்ளியாக இருக்கவில்லை. அவரால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து மக்கள் ஏற்கெனவே பார்த்து விட்டனர். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். மக்களின் ஆதரவு அந்தக் கூட்டணிக்குத் தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க மற்ற கட்சிகளின் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டதற்கு, குமாரசாமி, ‘அது அந்தந்த கட்சியின் தலைவரைப் பொறுத்தது. ராகுல் காந்தியுடன் கடந்த சில மாதங்களாக நான் உரையாடியதை வைத்து சொல்கிறேன், அவர் நாணயமானவர். என்னைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு எதிராக அமையும் கூட்டணிக்கு அவர் தான் தலைமை வகிக்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் கட்சி முழு சுதந்திரம் அளித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலின் போது, நாங்கள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளித்தது. இப்போது காங்கிரஸுக்கு நாங்கள் அதரவளிக்க வேண்டும்' என்று பதில் அளித்தார்.

.