Read in English
This Article is From Oct 29, 2018

லோக்சபா தேர்தல்: காங்கிரஸ் - தே.காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதற்கு முன்னர் 26:22 என்ற அடிப்படையில் தொகுதி பங்கீடு இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement
இந்தியா

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரும் பேசியுள்ளார்

Mumbai:

மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கும், மாநிலத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள 48 லோக்சபா தேர்தலில், 38 தொகுதிகளுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது எனவும், மீதம் உள்ள இடங்களுக்கு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ‘எங்களுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் 40 தொகுதிகளில் எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டது' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘காங்கிரஸுக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நல்ல முறையில் நடந்து வருகிறது. ஆனால், அது குறித்தான தகவல்களை இப்போது என்னால் தெரிவிக்க முடியாது' என்று கூறியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதற்கு முன்னர் 26:22 என்ற அடிப்படையில் தொகுதி பங்கீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லோக்சபா தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக களமிறங்கும் சரத் பவார், ‘பாஜக-வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்கட்சிகள் கூட்டணி வைக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு மாதிரியான அரசியல் சூழல் நிலவி வருகிறது. எனவே, பாஜக-வைத் தோற்கடிக்க பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி என்பது முக்கியமானதாகும்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

Advertisement