This Article is From May 22, 2019

விவிபிஏடி இயந்திரம் தொடர்பாக 22 எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை- தேர்தல் ஆணையம் நிராகரிப்பு!

இது தொடர்பாக நாட்டில் உள்ள 22 எதிர்க்கட்சிகள், நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒன்றாக சென்று புகார் அளித்தன. 

எதிர்க்கட்சிகள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க கால அவகாசம் வேண்டும் என்று நேற்று கூறியிருந்தார் இந்திய தேர்தல் ஆணையர்.

New Delhi:

விவிபிஏடி என்னும் வாக்குச் சீட்டு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே வாக்குச் சீட்டு இயந்திரத்தில் இருக்கும் ரசீதுகள், இ.வி.எம் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிடப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. அதை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், ‘வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகுதான் விவிபிஏடி வாக்குச் சீட்டு இயந்திரத்தை எண்ணும் பணி செய்யப்படும்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நாட்டில் உள்ள 22 எதிர்க்கட்சிகள், நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒன்றாக சென்று புகார் அளித்தன. 

எதிர்க்கட்சிகள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க கால அவகாசம் வேண்டும் என்று நேற்று கூறியிருந்தார் இந்திய தேர்தல் ஆணையர். இதையடுத்து, இது குறித்து முடிவெடுக்க இன்று தேர்தல் ஆணையக் குழுவில் இருக்கும் 3 அதிகாரிகளும் சந்தித்தனர். அவர்கள் சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்குப் பதிவு இயந்நிரங்களில் முறைகேடு நடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் விவிபிஏடி தொடர்பான கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் முன் வைத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பா உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பின்னர் நீதிமன்றம், ‘தற்போது விவிபிஏடி ரசீதுகளுடன் இ.வி.எம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் ஓட்டுகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்க ஓர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் மட்டும்தான் சோதனை செய்யப்படுகிறது. இனி, அது 5 வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டது. 

லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை, 30 விவிபிஏடி இயந்திரங்களில் இந்த சோதனை செய்யப்படும். 

இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பு, ‘அதிக நேரம் எடுக்கும்' என்று கூறியது. இருப்பினும் நீதிமன்றம், ‘இப்படி செய்வதன் மூலம் அரசியல் கட்சிகள் திருப்தியடைவர்' என்றது. 

.