This Article is From Jun 23, 2018

போராட்டத்தின் பொழுது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்!

இந்திரா காந்தி உட்பட பல தலைவர்களை எதிர்த்து கறுப்பு கொடி காட்டிய வரலாறு எங்கள் தி.மு.க கட்சிக்கு உண்டு

Advertisement
Tamil Nadu Posted by
தமிழ்நாடு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து போராட்டம் நடத்திய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், போலீசாரால் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார். நாமக்கலில் நேற்று ஆளுநரை எதிர்த்து கறுப்பு கொடி காட்டி போராடிய தி.மு.க கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இன்று போராட்டத்தில் ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின்.

"இந்திரா காந்தி உட்பட பல தலைவர்களை எதிர்த்து கறுப்பு கொடி காட்டிய வரலாறு எங்கள் தி.மு.க கட்சிக்கு உண்டு. ஆனால், எந்த காலத்திலும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதில்லை. ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார் ஸ்டாலின். "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ ஆளுநரை எதிர்த்து பேசமாட்டார்கள். அவர்களின் ஊழல் எல்லாம் அம்பலமாகிவிடும் என்கிற பயம் அவர்களுக்கு" என்றும் கூறினார். ஆளுநரை எதிர்த்து கறுப்பு கொடி காட்டிய போராட்டத்தில், நேற்று 190க்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement