This Article is From Jan 13, 2020

குடியுரிமை சட்ட திருத்தம், NRC குறித்து விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்!

கடந்த வாரம் நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது இடதுசாரி தொழிலாளர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக மம்தா எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின் பேரில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஹைலைட்ஸ்

  • Mamata Banerjee declared last week she would not attend the meet
  • Mayawati too will skip the meeting, sources said
  • The meet comes in backdrop of student protests, citizenship law
New Delhi:

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம், தற்போதைய அரசியல் நிலை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது இடதுசாரி தொழிலாளர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக மம்தா எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த சந்திப்பிற்கான யோசனையை அவர் தான் முன்வைத்தாகவும், எனினும் மாநிலத்தில் நடந்த சம்பவங்களால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளுக்கு எதிராக நான்தான் போராட்டத்தை தொடங்கினேன். ஆனால், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் செய்வதை ஏற்க முடியாது. அது போராட்டம் அல்ல வன்முறை' என்று கூறினார்.

ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்து வரும் குழந்தைகள் உயிரிழப்பு காரணமாக மாயாவதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் பெண் பொதுச்செயலாளர், கோட்டாவிற்கு சென்று குழந்தைகளை இழந்த தாய்மார்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காத நிலையில், உத்தர பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திப்பது அரசியல் நாடகம் என்று அவர் விமர்சித்துள்ளார். 

நேற்றைய தினம் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் சட்டம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை நாட்டு மக்களும், மாணவர்களும் நன்றாக புரிந்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பாக குடியுரிமை சட்ட திருத்தம் குறீத்து காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. குடியுரிமை சட்ட திருத்தத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஜாமியா மில்லியாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர். இதன்பின்னர்தான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கான எதிர்ப்பு தீவிரம் அடைந்தது. அதற்கு முன்பாக வெவ்வேறு கட்சிகள் நடத்திய போராட்டங்கள் பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டன.

போராட்டங்களை காங்கிரஸ் கட்சி வன்முறையாக மாற்றி வருகிறது என்று பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம் அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டினை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். 

.