முத்தலாக் குறித்து பேசினாலே வாக்குகளை இழந்துவிடுவோம் என எதிர்கட்சிகள் பயந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலம் சென்றார். அங்கு ஜார்சுகுடா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தல்சீர் பகுதியில் அமையவுள்ள உரத் தொழிசாலைக்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், பா.ஜ.க. அரசு மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபோது, உரம் தயாரிக்கும் தொழிசாலைக்கான பணிகளின் வேகத்தை அதிகரித்தது. தால்சர் உரம் தயாரிக்கும் ஆலை 36 மாதங்களில் நிறைவு செய்யப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். நிச்சயம் அதை மீண்டும் திறக்க நான் இங்கு வருவேன்.
முத்தலாக் குறித்து பேசினாலே வாக்குகளை இழந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக எதிர்கட்சிகள் உட்பட யாரும் அதைப் பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை. அப்படியிருக்கும் போது மூன்று நாட்களுக்கு முன்னதா க, முத்தலாக் குறித்து பல தசாப்தங்களாக தேவைப்படும் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு துணிச்சலுடன் எடுத் தது. இப்போது முத்தலாக் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.