This Article is From Oct 26, 2018

‘போன் ஒட்டுகேட்பு!’- தெலங்கானாவில் பகீர் குற்றச்சாட்டு சுமத்தும் எதிர்கட்சிகள்

தெலங்கானாவில் சீக்கிரமே சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில எதிர்கட்சிகள் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர்

‘போன் ஒட்டுகேட்பு!’- தெலங்கானாவில் பகீர் குற்றச்சாட்டு சுமத்தும் எதிர்கட்சிகள்

தெலங்கானா காபந்து ஐடி துறை அமைச்சராக இருக்கும் கே.டி.ராமா ராவ், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

Hyderabad:

தெலங்கானாவில் சீக்கிரமே சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில எதிர்கட்சிகள் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர்.

‘எங்கள் கட்சியைச் சேர்ந்த பலரின் போன் அழைப்புகளை, ஆட்சியில் இருக்கும் அரசு ஒட்டுகேட்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதற்காக அரசு புதிய இயந்திரங்களை வாங்கியுள்ளதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் சிலரது போன் அழைப்புகள் மட்டும் ஒட்டுகேட்கப்பட்டு வந்தது. தேர்தல் அறிவித்த பிறகு அனைவரின் அழைப்புகளும் ஒட்டுகேட்கப்பட்டு வருவதாக உளவுத் துறை அதிகாரிகளே என்னிடம் தெரிவிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று இந்த விவகாரம் குறித்து தெலங்கானா ஜன சமிதி கட்சியின் தலைவர் கோடாந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். 

இதே குற்றச்சாட்டை தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் முன்வைத்துள்ளார். அவர் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதையடுத்து காபந்து ஐடி துறை அமைச்சராக இருக்கும் கே.டி.ராமா ராவ், ‘தெலங்கானா டிஜிபி-யாக இருக்கும் மகேந்தர் ரெட்டி, நாட்டிலேயே சிறந்த அதிகாரி என்று பெயர் வாங்கியவர். அரசியலுக்காக அவரை அவமதிக்க வேண்டாம்' என்று பதிலடி கொடுத்துள்ளார். 

உத்தம் குமார், ‘தேவையில்லாமல் எதிர்கட்சியினர் செல்லும் வாகனங்கள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேர்தல் முடிந்த பின்னர் அமைக்கப்படும் தெலங்கானா அரசு, இந்த சட்ட மீறல்கள் குறித்து தீவிரமான விசாரணையை மேற்கொள்ளும்' என்று தெலங்கானா அரசை கடுமையாக சாடியுள்ளார். 
 

.