This Article is From Aug 22, 2020

ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை; எல்.முருகன்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020-ல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மொழி அவசியமில்லை என்று திமுக மட்டுமல்லாது, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Edited by

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பெரும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிப்பட தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது.

இதனால் பொது இடங்களை தவிர்த்து விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் ஆங்காங்கே நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. மத்திய அரசின் பல திட்டங்களையும் ரபேல் விமானத்தையும் தாங்கியவாறு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழிபாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், “தனியார் பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழிக்கான முக்கியத்துவத்தினை கொடுத்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை” என்றும் இதனை திமுக கடைப்பிடிக்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.