This Article is From Dec 24, 2018

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் மீண்டும் சேர்ப்பு!

அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கட்சியிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து கடந்த டிச.19ஆம் தேதி நீக்கப்பட்டார்.

Advertisement
Tamil Nadu Posted by

அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கட்சியிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து கடந்த டிச.19ஆம் தேதி நீக்கப்பட்டார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அன்று கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையில்,

அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழகத்தினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் இன்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினராகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement